உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் படைவீரர் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி

முன்னாள் படைவீரர் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி

சேலம்: முன்னாள் படை வீரர் நலனுக்கு, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' எனும் புது திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, 1 கோடி ரூபாய் வரை, வங்கிகள் மூலம் கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழிலுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியமும் பெறலாம். தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு வழங்கி பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி