உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.12 லட்சம் மோசடி: கிராம சபையில் சலசலப்புகேள்விப்பட்டு பாதி வழியில் திரும்பிய பி.டி.ஓ.,

ரூ.12 லட்சம் மோசடி: கிராம சபையில் சலசலப்புகேள்விப்பட்டு பாதி வழியில் திரும்பிய பி.டி.ஓ.,

பெத்தநாயக்கன்பாளையம்:மே தினத்தை ஒட்டி, பெத்தநாயக்கன்பாளையம், பி.கரடிப்பட்டியில் ஊராட்சி செயலர் ஜெயப்பிரகாசம் முன்னிலையில், கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும், அதிகாரிகளுடன், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்து மாதேஸ்வரி, 50, கூறியதாவது:கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் அரசு சார்பில், பி.கரடிப்பட்டியில் உள்ள 21 மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுக்கள் பெயரில், குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல், அவர்கள் பெயரில், 12 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.தற்போது வாங்காத கடனுக்கு வட்டியுடன் கடன் செலுத்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தையல் மிஷன், எலக்ட்ரிக் மிஷின், பாக்கு உரிக்கும் இயந்திரத்தை கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதை அறிந்து, பெத்தநாயக்கன்பாளையம் கிராம பி.டி.ஓ., துரைசாமி, பாதி வழியில் காரை நிறுத்தி, கூட்டத்துக்கு செல்லாமல் திரும்பி சென்றார்.இதுகுறித்து துரைசாமியிடம் கேட்டபோது, ''கடன் தொகை மோசடி குறித்து நான் விசாரிக்க முடியாது. அதற்கு தனி அலுவலர் இருக்கிறார். கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, கூட்டம் முடிந்து கலைந்து விட்டதாக அலுவலர்கள் தெரிவித்ததால், திரும்பி சென்றேன்,'' என்றார்.வாழப்பாடி, அத்தனுார்பட்டியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பங்கேற்றார். அதில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராமங்களில் மனைப்பிரிவு, சுய சான்றுகளை கொண்டு கட்டட அனுமதிகளை இணைய வழியில் மட்டும் பெற முடியும். குடிநீர் கட்டணம், வரி வசூல் ஆகியவையும், இணைய வழியில் செலுத்தும் முறை குறித்து, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து விவாதம் நடந்தது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், பயனாளிகளின் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து, உரிய அலுவலர்கள் பேசினர். மக்கள், பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி