அதிக வட்டி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி
சேலம்:துபாய் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி பெறலாம் எனக்கூறி பண மோசடி செய்த புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன்,26. இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இவரது தாய், கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றபோது, 19 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.சவுந்தரராஜனுக்கு அறிமுகமான செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த யுவராஜ், 'துபாய் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாத வட்டி, 6,000 ரூபாய் கிடைக்கும்' என கூறினார். அதை நம்பிய சவுந்தரராஜன், 19 லட்சம் ரூபாயை, யுவராஜ் கூறிய வங்கி கணக்குக்கு படிப்படியாக அனுப்பி வைத்தார். ஆனால், வட்டி எதுவும் வராததால், பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சவுந்தரராஜன், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.