ஐ.டி., ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி; நண்பருக்கு வலை
கெங்கவல்லி: தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரையை சேர்ந்தவர் திருமூர்த்தி, 30. பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது நண்பர், தெடாவூரை சேர்ந்த முத்துசாமி, 31. இவர், தாய்க்கு உடல் நிலை சரியில்லை என, திருமூர்த்தியிடம் பணம் கேட்டார். அதற்கு திருமூர்த்தி, அவர் வைத்திருந்த, 'கிரடிட்' கார்டை கொடுத்து, பணம் எடுத்து செலவு செய்துவிட்டு, பின் அத்தொகையை வங்கியில் செலுத்தும்படி கூறினார். ஆனால் வங்கியில் பணம் செலுத்தவில்லை. இதுகுறித்து முத்துசாமியிடம் கேட்டபோது அலைக்கழித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனை அணைத்துவைத்து விட்டு தலைமறைவானார். இதனால் திருமூர்த்தி புகார்படி கெங்கவல்லி போலீசார், நேற்று முத்துசாமி மீது வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.