எஸ்.சாலை வளைவு விபத்துக்கு வழிவகுப்பு
பனமரத்துப்பட்டி, சேலம் - கம்மாளப்பட்டி சாலையில் பனமரத்துப்பட்டி அடுத்த, தனியார் பள்ளி அருகே எஸ். சாலை வளைவு உள்ளது. கம்மாளப்பட்டியில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், அந்த வளைவில் திரும்பும்போது, எதிரே வரும் மற்ற வாகனங்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க முற்படும்போது, சாலையோர மின் கம்பம், விவசாய வயலில் வாகனங்கள் பாய்கின்றன. அதேநேரம் சேலம் நோக்கி செல்லும் சாலை இறக்கமாக உள்ளது. அதனால் வாகனங்கள் வேகமாக இறங்கி வருகின்றன. அந்த எஸ்.சாலை வளைவில் சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். வளைவுக்கு முன்னதாக, பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.