உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூக்கை நுழைத்ததால் மூக்குடைந்த சோகம்

மூக்கை நுழைத்ததால் மூக்குடைந்த சோகம்

தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல், சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 54; அதே பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். அதே ஊரை சேர்ந்த மகேந்திரன், கடன் பிரச்னை தொடர்பாக செல்வம் கடையில் வைத்திருந்த பொருட்களை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டார். அங்கு வந்த சிறுவாச்சூர் அன்பு நகரை சேர்ந்த, தி.மு.க., தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலரான பாலமுருகன், 55, கடன் பிரச்னை குறித்து மகேந்திரனிடம் கேட்டுள்ளார்.அப்போது செல்வம், பாலமுருகனை தகாத வார்த்தையில் திட்டியதுடன், இரும்பு கம்பியில் தாக்கியுள்ளார். இதில் மூக்குடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பாலமுருகன் புகார்படி செல்வம் மீது, மூன்று பிரிவுகளில் தலைவாசல் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை