உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் டீனுக்கு சாகா - 2025 அங்கீகாரம்

விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் டீனுக்கு சாகா - 2025 அங்கீகாரம்

சேலம்: அரசு சாரா முன்னணி நிறுவனமாக, ஆர் உலக தரவரிசை நிறுவனம் செயல்படுகிறது. இந்த அமைப்பு, ஆண்டுதோறும் கல்வி சார்ந்த முன்னோடிகள், தொலைநோக்கு பார்வையாளர்களை அங்கீகரிக்கும்படி சிறப்பு கட்டுரை வெளியிட்டு அங்கீகரித்து வருகிறது. அதன்படி சேலம் விநாயகா மிஷன் பல்கலையின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி டீன் செந்தில்குமார், 'கல்வி வளர்ச்சி யின் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தனித்துவ தலைமைத்துவம்' என்ற அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.இந்த அங்கீகாரம், அவரது கல்வித்துறை சார்ந்த பல்வேறு புதுமை நடவடிக்கைகளை மையப்படுத்தியும், டிஜிட்டல் கற்றலை மேம்படுத்துவதன் மூலமும் கல்வியியல் மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னிறுத்தியதை மையமாக கொண்டும், ஆர் உலக தரவரிசை அமைப்பின் சாகா - 2025' புத்தகத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, கல்லுாரி பேராசிரியர்கள், டீனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை