உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனைஓமலுார், நவ. 16--ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. விற்பனையாளர் ஆனந்தி தலைமை வகித்தார். அதில், 24 விவசாயிகள், 164 மூட்டைகளில் கொப்பரையை கொண்டு வந்தனர். 6 வியாபாரிகள், கிலோவுக்கு, 88.99 முதல், 142.29 ரூபாய் வரை ஏலம் கோரினர். 69.66 குவிண்டால் மூலம், 9,09,632 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. அதேபோல் கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. அதில், 60 மூட்டை கொப்பரையை கொண்டுவந்தனர். ஒரு கிலோ முதல் தர கொப்பரை, 105 ரூபாய், இரண்டாம் தரம், 90 ரூபாய்க்கு விலைபோனது. இதன்மூலம், 2.60 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை