மேலும் செய்திகள்
சேலம்-சென்னை விமான நேரம் வரும் 26 முதல் மாற்றம்
14-Oct-2025
ஓமலுார், சேலம்-சென்னை விமான டிக்கெட் அனைத்தும், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே புக்கிங் செய்யப்பட்டுள்ளது.சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்படுகிறது. இண்டிகோ விமான நிறுவனம் சார்பில், சென்னை-சேலம்-, சேலம்-சென்னை பகுதிக்கு உடான் அல்லாத திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். தீபாவளி மறுநாளான இன்று, சென்னையிலிருந்து சேலத்துக்கும், சேலத்திலிருந்து சென்னைக்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 'புக்கிங்' செய்யப்பட்டுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட ஏ.டி.ஆர்., ரக விமானம் இயக்கப்படுகிறது. நேற்று, 60 சீட்கள் புக்கிங் செய்யப்பட்டிருந்தது.
14-Oct-2025