உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாயுமானவர் திட்டத்தில் பயன்பெறுவோரில் சேலம் மாவட்டம் முதலிடம்: அமைச்சர்

தாயுமானவர் திட்டத்தில் பயன்பெறுவோரில் சேலம் மாவட்டம் முதலிடம்: அமைச்சர்

சேலம்: முதல்வர் ஸ்டாலின், சென்னையில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்-களுக்கு சென்று, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்-களை வினியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை, நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சேலத்தில் அமைச்சர் ராஜேந்-திரன், கருப்பூர் ரேஷன் கடைக்கு உள்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று, பொருட்களை வழங்கினார்.பின் அவர் கூறியதாவது:மாவட்டத்தில், 1,265 முழு நேரம், 478 பகுதி நேரம் என, 1,743 ரேஷன்கள் கடைகள் உள்ளன. தாயுமானவர் திட்டம் மூலம், 92,998 கார்டுகளுக்கு வினியோகிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக எண்ணிக்கையில் பயன்பெறுவோரில், சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மின்னணு தராசு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்க-ளுடன் ரேஷன் பொருட்களை வேன்கள் மூலம் தகுதியான பய-னாளர்கள் வீடுகளுக்கே எடுத்து சென்று ரேஷன் விற்பனையா-ளர்கள் வினியோகம் செய்கின்றனர். மாதந்தோறும், 2வது சனி, ஞாயிறில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில், 1,489 குழுக்களாக பிரிந்து மாநக-ராட்சி, நகராட்சிகளில், 70 கார்டுக்கு ஒரு வாகனம், மலைப்பகு-தியில், 50 கார்டுக்கு ஒரு வாகனம், கிராம பகுதியில், 60 கார்-டுக்கு ஒரு வாகனம் வீதம், ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்-படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் பிருந்தாதேவி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்-குமார், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், கருப்பூர் டவுன் பஞ்சாயத்து தலைவி சுலோசனா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ