உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புற்றுநோய் கண்டறியும் முகாம் சேலம் எம்.பி., துவக்கிவைப்பு

புற்றுநோய் கண்டறியும் முகாம் சேலம் எம்.பி., துவக்கிவைப்பு

இடைப்பாடி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, கொங்கணாபுரத்தில் பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் முகாம் நேற்று நடந்தது. தி.மு.க.,வின் ஒன்றிய செயலர் பரமசிவம் தலைமை வகித்தார்.சேலம் எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்து பேசுகையில், ''புற்றுநோய் என்பது ஆட்கொல்லி நோய். கடந்த ஆண்டு நங்க-வள்ளியில் நடத்திய முகாமில் சில பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர்கள் குணமடைந்துள்ளனர். இதனால் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முகாம் நடத்தப்படுகிறது,'' என்றார்.மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், பேரூர் செயலர் அர்த்த-னாரீஸ்வரன், தங்காயூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை