உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் காவலில் எடுக்க தாக்கலான மனு தள்ளுபடி

போலீஸ் காவலில் எடுக்க தாக்கலான மனு தள்ளுபடி

சேலம்: சேலத்தில் நில அபகரிப்பு முயற்சி வழக்கில், ஏழு பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீஸார், தாக்கல் செய்த மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. சேலம் கோயம்பத்தூர் ஜூவல்லர்ஸ் அதிபர் பிரேம்நாத், ஸ்ரீநாத் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ்குமார் உள்பட 16 பேர் மீது, மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட லட்சுமணன், பாலகுருமூர்த்தி, ரங்கநாதன், முரளி, 'ஜிம்' ராமு, ஜான்ஆலோசியஸ், நாராயணன் ஆகிய ஏழு பேரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஜே.எம்., எண்:2 நீதி மன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, ஜே.எம்., எண்:2 நீதிமன்ற (பொறுப்பு) மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா முன்னிலையில் நேற்று நடந்தது. மாநகர குற்றப்பிரிவு போலீஸார், ஏழு பேரையும் 'காவலில்' எடுத்து விசாரிக்க கோரிய மனுவை, மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி