உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுந்தரம் பைனான்ஸில்23, 2 4ல் வாகன திருவிழா

சுந்தரம் பைனான்ஸில்23, 2 4ல் வாகன திருவிழா

சேலம்: ஆத்தூரில், சுந்தரம் பைனான்ஸ் சார்பில், நாளை துவங்கி 2 நாட்களுக்கு வாகன திருவிழா நடக்கிறது.ஆத்தூர் நகரில் வசிக்கும் வாடிக்கையாளர்கள், அனைத்து விதமான வாகனங்களை ஒரே இடத்தில் தேர்வு செய்து, அதற்கான நிதியுதவியை பெறும் வகையில், சுந்தரம் பைனான்ஸ் சார்பில், மாபெரும் வாகன திருவிழா நடத்தப்படுகிறது.ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள விஸ்ணு பிரியா திருமண மண்டபத்தில், நாளை துவங்கி, 2 நாட்கள் வாகன திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவில், ஆனமலைஸ் டயோட்டாவின் டயோட்டா, ரமணி கார்ஸின் ஹுண்டாய், ரமணி கார்ஸ் (பி)லிட்.,ன் வால்ஸ்வேகன், ராக்கிசிட்டி போர்டின் ஃபோர்டு, எஸ்.கே.,கார்ஸ் இந்தியா (பி) லிட்., மாருதி, எஸ்.7 கார்ஸ் ஸ்கோடா, சுந்தரம் ஹோண்டாவின் ஹோண்டா, தி ட்ரூ சாய் ஒர்க்ஸ் பியட், டாடா, த்ரைவ் கார்ஸ் சேவ்ரோலெட், இஷா ஏஜன்ஸியின் ஈச்சர் டிராக்டர், ஜெய்லட்சுமி ஆட்டோவின் ஈச்சர், கிரிஸ்டல் மோட்டார்ஸின் எஸ்.எம்.எல்., இசுசூ போன்ற வாகனங்கள் இடம் பெறுகின்றன.மேலும், மகேந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூமென்ட்ஸ் சி.இ., டிவிசன், ரேசஸின் ஜான் ட்ரி, கேஸ் நியூ ஹாலந்து, ரெயின்போ மோட்டார்ஸ் லிட் டோஸ்ட், எஸ்.கே.எஸ்., ஆட்டோமொபைல்ஸ் மஹிந்திரா, ஸ்ரீ அம்மன் மில்ஸ் ஸ்பேர்ஸ் கர்டார் ஹேர்வெஸ்டர், ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பாலிசி, சுந்தரம் பி.என்.பி., பாரிபாஸ் ஹோம் பைனான்ஸ் லிட்.,ன் ஹோம் லோன் போன்றவையும் பங்கேற்கின்றன.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான புதிய மற்றும் பழைய வாகனங்களை தேர்வு செய்து, அதற்கான நிதியுதவியை பெற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை