உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்கள் தொடர் சாதனை

சேலம் எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்கள் தொடர் சாதனை

சேலம்:இந்த கல்வியாண்டிற்கான ஜேசிஐ ஜிகே எக்ஸல் அவார்டின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டி, கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியில் நடைபெற்றது. இதில், எஸ்.எஸ்.ஆர்.எம் பள்ளி மாணவ, மாணவியர் கடந்த பத்து ஆண்டுகளாக பங்கேற்று வந்துள்ளனர். இக்கல்வியாண்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற, முதல் சுற்று போட்டியில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற்று, மாநில அளவிலான கடைசி சுற்றில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இப்போட்டியில், எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியின் 32 மாணவர்கள் பல்வேறு பரிசுகளையும், கேடயங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். 69 மாணவ மாணவியர் எக்ஸல் மெரிட் அவார்ட் சான்றிதழ்களையும், மெடல்களையும் பெற்றுள்ளனர். ஆறு மாணவ, மாணவியர் மாநில அளவிலான இரண்டாம் சுற்றை வென்று, எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளிக்கு மாநில அளவிலான ரோலிங் டிராபியை வென்று கொடுத்து பள்ளிக்கு பேரும், பெருமையும் சேர்த்துள்ளனர்.பள்ளியில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் தலைமை வகித்து, பல்வேறு பரிசுகளை வென்ற மாணவ மாணவியரை, பள்ளி நிர்வாக குழு தலைவர் ஆண்டியப்பன், நிர்வாக குழு செயலாளர் சண்முகம், நிர்வாக குழு பொருளாளர் பன்னீர்செல்வம், பள்ளி தலைமையாசிரியர் குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி