உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் சலுான் கடைக்காரர் உயிரிழப்பு

விபத்தில் சலுான் கடைக்காரர் உயிரிழப்பு

தாரமங்கலம், மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்தவர் கோகுல்சங்கர், 21. சலுான் கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவர் கடந்த, 2ல், 'அக்சஸ்' மொபட்டில் தாரமங்கலத்தில் இருந்து, வெள்ளாளபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். இரவு, 8:30 மணிக்கு, சின்னப்பம்பட்டி அருகே முனியப்பன் கோவில் பகுதியில் சென்றபோது, டிராக்டர் திரும்பியபோது, அதில் மோதிய கோகுல்சங்கர் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ