உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளப்பிள்ளையார் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து

வெள்ளப்பிள்ளையார் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து

ஆத்துார், சுதந்திர தினத்தையொட்டி, ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில் நேற்று, சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஆத்துார் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பாதிரியார் அருளப்பன், முஸ்லிம் சமுதாயத்தினர், சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 500 பேருக்கு, அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.'சமபந்தி போஜனா'அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சமபந்தி போஜனா நிகழ்ச்சி நடந்தது. அதில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் குணசேகரன், தி.மு.க.,வின் மேற்கு ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்பட பலர் உணவு அருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை