உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்ட ஹாக்கி போட்டி சங்ககிரி அரசு பள்ளி முதலிடம்

மாவட்ட ஹாக்கி போட்டி சங்ககிரி அரசு பள்ளி முதலிடம்

சேலம், தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் அமைப்பு சார்பில், சேலம் மாவட்ட அளவில் போட்டி, 4 ரோடு அருகே சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதில், தனியார் பள்ளிகள் உள்பட, 6 அணிகள் பங்கேற்றன. அதன் முடிவில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற சங்ககிரி அரசு மேல்நிலைப்பள்ளி - சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடின. அதில் சங்ககிரி பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இதன்மூலம் அந்த அணி, மண்டல போட்டிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !