உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சியில் துாய்மை விழிப்புணர்வு

மாநகராட்சியில் துாய்மை விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாநகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்-டலம், 14 வது வார்டு, வெங்கடேசபுரத்தில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியை, மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அங்குள்ள பெருமாள் கோவில் தெரு, அங்காளம்மன் தெரு, கிழக்கு தெரு, மேற்கு தெரு ஆகிய பகுதிகளில், வீடு வீடாக குப்பை சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்-டது.துாய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், விநாயகாமிஷன் மருத்துவ கல்-லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை