உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வட்டார விளையாட்டு போட்டிகளில் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சாதனை

வட்டார விளையாட்டு போட்டிகளில் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சாதனை

வாழப்பாடி, வாழப்பாடி வட்டார அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே தடகள தனித்திறன், பல்வேறு அணி விளையாட்டு போட்டிகள், சிங்கிபுரம் மற்றும் சேலம் காந்தி மைதானத்தில் நடந்தது.அதில், புதுப்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 22 பேர் பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர். வட்டார அளவில் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகி, 'நல்லாசிரியர்' செல்லதுரை, முதல்வர் கோபால், துணை முதல்வர் பழனிசாமி, இயக்குனர் அஸ்வின் பாலாஜி, உடற்கல்வி ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ