உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3ம் மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் படுகாயம்

3ம் மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் படுகாயம்

சேலம், சேலம், நாராயண நகர், குறிஞ்சி நகர் ஹைவுசிங் போர்டு கட்டடத்தின், 3ம் மாடியில் வசிப்பவர் கிருபாகரன். இவரது மகன் ஆதிநாராயணன், 15. இவர், 10ம் வகுப்பு படிக்கிறார். தினமும் மொட்டை மாடியில் படுப்பார். அங்குள்ள தொட்டியில் தண்ணீர் சிந்தி, ஒரு பகுதியில் பாசி பிடித்திருந்தது.இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஆதிநாராயணன் எழுந்தபோது, பாசி வழுக்கி, மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதில் கை, கால்கள், முதுகில் படுகாயம் ஏற்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை