உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவிகளிடம் சீண்டல் டவுன் பஸ் கண்டக்டர் கைது

பள்ளி மாணவிகளிடம் சீண்டல் டவுன் பஸ் கண்டக்டர் கைது

சங்ககிரி, இடைப்பாடி, மோட்டூரை சேர்ந்த, 13 வயது சிறுமி, 7ம் வகுப்பு படிக்கிறார். அவர், கடந்த 15ல், சக மாணவியருடன், ஜலகண்டாபுரம் செல்லும், '3பி' டவுன் பஸ்சில், இடைப்பாடியில் ஏறி பயணித்தார்.அப்போது கண்டக்டர் பணியில் இருந்த, இடைப்பாடி, சித்துாரை சேர்ந்த சின்னுசாமி, 45, மாணவியர் அனைவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, 13 வயது சிறுமியின் தாய், நேற்று முன்தினம், சங்ககிரி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், 'நான், மகள், மற்ற, 6 மாணவியர், கடந்த, 15ல் டவுன் பஸ்சில் பயணித்தபோது, அந்த பஸ் கண்டக்டர், மகள் மீது வேண்டுமென்றே உரசினார். அதேபோல் மற்ற மாணவியர் மீதும் உரசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால் போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்து, சின்னுசாமியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை