மேலும் செய்திகள்
விதிமீறிய 165 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
19-Nov-2024
ஏற்காடு: சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் குழுவினர், ஏற்காட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுலா பயணியர் ஓட்டிவந்த, 3 ஸ்கூட்டர்களை தணிக்கை செய்ததில், ஏற்காட்டில் விதிமீறி வாடகைக்கு எடுத்து வந்தது தெரிந்தது. 3 ஸ்கூட்டர்களையும், போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சரியான ஆவணம் இல்லாத ஒரு பொக்லைனையும் பறிமுதல் செய்தனர்.தவிர ஓட்டுனர் உரிமம், சரியான ஆவணமில்லாத வாகனங்கள், அனுமதியின்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்றது உள்ளிட்ட விதிமீறல்களை கண்டறிந்து, அபராதம் விதித்து, 75,000 ரூபாய் வசூலித்தனர். அதேபோல் சரியாக வரி கட்டாத வாகன உரிமையாளர்களிடம், 75,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
19-Nov-2024