2 ஊராட்சியில் 25,000 செடி நட இடம் தேர்வு
பனமரத்துப்பட்டிபனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பள்ளிதெருப்பட்டி ஊராட்சியில் நர்சரி அமைத்து, 25,000 செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.தமிழக பசுமை இயக்க திட்டத்தில், 25,000 செடிகள் நடவு செய்ய, இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்நிலையில் நேற்று, பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்திகேயன், சேலம் தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோர், குரால்நத்தம் மற்றும் கம்மாளப்பட்டி ஊராட்சிகளில் தலா, 3 ஏக்கர் வீதம், 6 ஏக்கர் அரசு நிலத்தை பார்வையிட்டனர்.அங்கு, 25,000 செடிகள் நடவு செய்து பசுமை வனம் உருவாக்கப்படவுள்ளது.