உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுய உதவி குழு உறுப்பினர்கள் மின் ஆட்டோ வாங்க கடனுதவி

சுய உதவி குழு உறுப்பினர்கள் மின் ஆட்டோ வாங்க கடனுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்-கத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்-பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மின் ஆட்டோ வாங்க, மகளிர் திட்டம் மூலம் வங்கி கடன் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு, விருப்பம், தகுதி உள்ள மகளிர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதற்கு நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மகளிர் குழு உறுப்பினராக இருக்க வேண்டும். பயனாளியின் மகளிர் சுய உதவிக்குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைவு பெற்றவையாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு முடித்-திருந்து, 25 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயனாளிகள் அனுபவம், மின் ஆட்டோ ஓட்டுவதற்கு பேட்ஜூடன் செல்லுபடி-யாகும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.மகளிர் திட்டம் மூலம் வங்கி கடன் இணைப்பு வழங்கப்படும். தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்திருந்தால், 1 லட்சம் ரூபாய் மானியம், மீதித்தொகைக்கு வங்கி கடன் பெற்று தரப்-படும். தகுதி உடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சுய விபரங்களை, 'திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண் அலகு, அறை எண்: 207, மகளிர் திட்டம், 2வது தளம், கலெக்டர் அலுவலகம், சேலம்' எனும் முகவரியில், வரும், 24 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி