உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி ஆசிரியருடன் செல்பி முன்னாள் மாணவியர் நெகிழ்ச்சி

பள்ளி ஆசிரியருடன் செல்பி முன்னாள் மாணவியர் நெகிழ்ச்சி

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கொட்டவாடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்-கப்பள்ளியில், 1978 முதல், 1990 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்-திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர், 100க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். இதில் அப்போதைய ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்து, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. பின் ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவ, மாணவியர், 'செல்பி' எடுத்து மலரும் நினைவு-களை பகிர்ந்து கொண்டனர். அறுசுவை உணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.தாரமங்கலம்அதேபோல் தாரமங்கலம், பழக்காரனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. 40 ஆண்டுக்கு முன் படித்த மாணவர்கள், மும்பை, பெங்-களூரு, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் என, 15க்கும் மேற்-பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி நடத்தி விளையாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ