மேலும் செய்திகள்
ரேஷன் கட்டடம் எம்.எல்.ஏ., திறப்பு
06-Jun-2025
சங்ககிரி, சங்ககிரி அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை, அக்கமாபேட்டை அருகே பாலத்திற்கு அடியில் பெண் ஒருவர் வாயில் துணி கட்டி, அரைநிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலுாரில் இருந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையில் சங்ககிரி, அக்கமாபேட்டை அருகே பாலத்தின் அடியில் வாயில் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் முகம் சிதைந்து, கால்கள் கட்டப்பட்டு, உடல் அழுகிய நிலையில், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீசார் கண்டுபிடித்தனர்.சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயல், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., சிந்து, சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக, போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதேபோல் கடந்தாண்டு செப்., 30ல், பெங்களூருவில் பெண் கொலை செய்யப்பட்டு, சங்ககிரியில் வீசப்பட்டதுபோல், இந்த சம்பவமும் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
06-Jun-2025