உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  பாலியல் புகா:ர் ஜெ., பேரவை பிரமுகர் நீக்கம்

 பாலியல் புகா:ர் ஜெ., பேரவை பிரமுகர் நீக்கம்

ஆத்துார்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், விநாயகபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 37. அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலராக இருந்தார். இரு நாட்களுக்கு முன், ஆத்துாரை சேர்ந்த, திருமணமான, 31 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின்படி, ஆத்துார் டவுன் போலீசார், நேற்று முன்தினம் சங்கரை கைது செய்தனர். நேற்று மதியம், மருத்துவ பரிசோதனைக்கு, அவரை ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் வகித்து வந்த கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்