சிறுமிக்கு பாலியல் தொல்லை: மேம்பாலத்தில் தாக்கப்பட்ட நெல்லை வாலிபர் சிக்கினார்
சேலம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலத்தில் கடந்த, 25ல், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தச்சு தொழிலாளி பிரம்மநாயகம், 30, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த, கல்லுாரி மாணவர்கள், சிறுவன் என, 3 பேர் பிரம்மநாயகத்தை தாக்கி, அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து உடைத்தனர்.பிரம்மநாயகம் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்ததில், புதுச்சேரியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, பிரம்மநாயகம், சுரேஷ் என்ற பெயரில் பழக்கமாகி, இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்ததும், அதன்மூலம் சிறுமி புகைப்படத்தை பெற்ற அவர், அந்த படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளார்.அதிர்ச்சியடைந்த சிறுமி, சேலத்தை சேர்ந்த, கல்லுாரி மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால்தான், பிரம்மநாயகத்திடம் மொபைல் போனை பறித்து உடைத்ததாக, போலீசாரிடம், 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர். பின் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.அதேநேரம் சிறுமியை சீண்டிய பிரம்மநாயகத்தை பிடிக்க, 26ல் தனிப்படை போலீசார், நெல்லை சென்றனர். அங்கிருந்த பிரம்மநாயகத்தை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், நேற்று முன்தினம் சேலம் அழைத்து வந்து விசாரித்ததில், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தது தெரியவந்தது. இதனால் நேற்று, பிரம்மநாயகத்தை, போலீசார் கைது செய்தனர்..