மேலும் செய்திகள்
ஷீரடி சாய்பாபா பாதுகை 19, 20ல் தரிசிக்க ஏற்பாடு
13-Apr-2025
சேலம்: மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோவிலில் இருந்து, அவர் பயன்படுத்திய பாதுகையை, சேலம் சீரடி சாய் நண்பர் குழு, சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் இணைந்து, சேலம் பக்தர்கள் தரிசனம் செய்ய வரவழைத்தனர். தொடர்ந்து, 3 ரோடு அருகே வரலட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட பாதுகையை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நேற்று தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பாபாவின், 'உதி' பிரசாதம் வழங்கப்பட்டது.பாதுகைக்கு சிறப்பு காக்கட ஆரத்தி, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ர நாம பாராயணங்கள், சாய்நாத ஸ்தவன மஞ்சரி, ஸ்ரீருத்ரம் உள்ளிட்ட சாய் பாபா பஜனை பாடல்களை பக்தர்கள் நாள் முழுதும் பாடினர். காலை, 11:00 மணிக்கு அமைச்சர் ராஜேந்திரன், சாய்பாபா பாதுகையை தரிசனம் செய்தார்.அவருக்கு மரியாதை செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் காலை, 6:30 முதல் இரவு, 10:00 மணி வரை பாதுகையை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சீரடி சாய் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.இதுகுறித்து குழுவினர் கூறுகையில், 'சீரடி சாய்பாபா பயன்படுத்திய, 3 பாதுகைகளில் ஒன்று சீரடி கோவிலிலும், இரு பாதுகைகள், அவரது சீடர்களான மஹல்சாபதி, நானே சாகோப் ஆகியோரிடம், 1898ல் சாய்பாபா வழங்கியுள்ளார். எங்கள் குழு சார்பில், 9 ஆண்டாக அவரது பாதுகை தரிசனத்தை, சேலத்தில் நடத்தி வருகிறோம். இதுவரை சீடர்களிடம் உள்ள பாதுகைகள் மட்டும் வரவழைக்கப்பட்ட நிலையில், 10ம் ஆண்டாக இம்முறை, சீரடி சாய்பாபா கோவிலில் உள்ள பாதுகை கொண்டுவரப்பட்டுள்ளது' என்றனர்.
13-Apr-2025