மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் 'பிடிவாரன்ட்
26-Sep-2024
பெயின்டரை குத்தியசித்தப்பாவுக்கு 7 ஆண்டு சிறைசேலம், அக். 23-சேலம், ஜான்சன்பேட்டையை சேர்ந்த, பெயின்டர் மணி, 36. இவரது சித்தப்பா பாஸ்கர், 53. இவரும் அதே பகுதியில் வசித்தார். வீடு பாகம் பிரிப்பதில், இவர்கள் இடையே தகராறு இருந்தது.கடந்த 2021 ஏப்., 8ல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிக்கும், பாஸ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பாஸ்கர், கத்தியால் மணியை குத்தினார். மணி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஸ்கரை கைது செய்தனர்.இந்த வழக்கு, சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பாஸ்கருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நம்பிராஜன் நேற்று உத்தரவிட்டார்.
26-Sep-2024