| ADDED : பிப் 25, 2024 03:35 AM
சேலம்: சேலம், முள்ளுவாடி கேட், மக்கான் தெருவை சேர்ந்த வெள்ளி தொழிலாளி ஜாகீர் உசேன், 36. இவர் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை முடிவெடுத்து நேற்று முன்தினம் மதுபாட்டிலில் சயனைடு கலந்து அதை வீட்டில் பீரோ அடியில் மறைத்து வைத்திருந்தார்.அவரது தம்பி சதாம் உசேன், 32. சுமை துாக்கும் தொழிலாளி. திருமணம் ஆகாத இவர், வீட்டில் இருந்த மதுவை பார்த்து, சயனைடு கலந்திருப்பது தெரியாமல் எடுத்துக்கொண்டு அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றார். தொடர்ந்து அவரும், அவரது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த ஹசேன், 39, என்பவரும் சேர்ந்து குடித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர். இதையடுத்து அவர்களை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு ஹசேன் நேற்று இறந்தார். தனியார் ஓட்டுனர் பயிற்சிபள்ளியில் பயிற்சியாளராக பணியாற்றிய ஹசேனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது உடலை கைப்பற்றி சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, ஜாகீர்உசேனை போலீசார் கைது செய்தனர். மேலும் சதாம் உசேன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.