உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சார் பதிவாளர் ஆபீஸ் இன்று திறப்பு விழா

சார் பதிவாளர் ஆபீஸ் இன்று திறப்பு விழா

ஓமலுார்: ஓமலுார் தாலுகாவில் இருந்து, 2016ல் காடையாம்பட்டி தாலுகா உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தாலுகா அலுவலக கட்டடம், தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டது.தற்போது காடையாம்பட்டி தாசில்தார் அலுவலக வழியில் உள்ள தனியார் கட்டடத்தில், காடையாம்பட்டி சார் - பதிவாளர் அலுவ-லகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன் திறப்பு விழா இன்று காலை நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார். தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.ஓமலுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்த, 20 கிரா-மங்கள், மேச்சேரி அலுவலகத்தில், 4, தர்மபுரி மாவட்டம் பாப்பி-ரெட்டிப்பட்டி அலுவலகத்தில், 2 என, 26 கிராமங்கள், புது அலு-வலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த கிராமங்கள், கணினி வாயிலாக மென்பொருள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. திறப்பு விழா முடிந்த பின், விரைந்து பத்-திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை