உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ‘இரட்டை சதம்’ அடித்தது சின்ன வெங்காயம் விலை

‘இரட்டை சதம்’ அடித்தது சின்ன வெங்காயம் விலை

தலைவாசல்: சாகுபடி பரப்பு குறைந்ததால், வரத்து குறைந்து, சின்ன வெங்காயம் விலை முதல்முறையாக, கிலோ, 200 ரூபாயாக உயர்ந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து, 40 சதவீதம் குறைந்துள்ளது. நேற்று முதல்தர வெங்காயம் கிலோ, 200 ரூபாய் வரை விற்பனையானது. காய்கறி மொத்த வியாபாரி சீனிவாசன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் சின்ன வெங்காயம் கிலோ, 10 முதல், 20 ரூபாய் வரையே விற்றது. இதனால் அதன் சாகுபடி வெகுவாக குறைந்தது. தற்போது வரத்தும் குறைத்துவிட்டது. கடந்த செப்டம்பர் முதல் கிலோ, 60 -– 70 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. படிப்படியாக உயர்ந்து, தற்போது கிலோ அதிகபட்சமாக, 200 ரூபாய்க்கு விற்கிறது. இதற்கு முன், 2023ல் சின்ன வெங்காயம் கிலோ, 150 -– 170 ரூபாய் வரை சென்றதே அதிகபட்சம்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
நவ 18, 2026 19:21

தமிழக அரசு, உடனடியாக, 20000 டன், சாம்பார் வெங்காயம் என்று சொல்லப்படும் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்து, நியாயவிலைக்கடைகளில், ஒரு குடும்பத்திற்கு 1 கிலோ வீதம், கிலோ 10 ரூபாய்க்கு கிடைக்குமாறு ஆவண செய்யவேண்டும். இலவசமாய் வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை