உழவர் சந்தைகளில் ரூ.1.31 கோடிக்கு விற்பனை
சேலம் :அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்பட, 13 இடங்களில் உள்ள உழவர் சந்தைகளிலும், வழக்கத்தை விட காய்கறி விற்பனை அமோகமாக நடந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள், வாழைப்பழம், வாழை இலை, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகளை, அதிகமாக வாங்கினர். 310.32 டன் காய்கறி, பழ வகைகள் மூலம், 1.31 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.