உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரூர் - ஈரோடு இடையே சில ரயில் இயக்கம் ரத்து

கரூர் - ஈரோடு இடையே சில ரயில் இயக்கம் ரத்து

சேலம்:ஈரோடு - கரூர் தடத்தில் உள்ள மூர்த்திபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு, பொறியியல் பணிகள் நடக்க உள்ளன. இதனால் மார்ச் 16(நாளை) காலை, 7:25க்கு புறப்படும், திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படும். அன்று அதிகாலை, 5:20க்கு கிளம்பும், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் கரூருடன் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின், முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயக்கப்படும்.அன்று மதியம், 2:00 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மதியம், 3:05க்கு கரூரில் இருந்து கிளம்பும். ஈரோடு முதல் கரூர் வரை ரத்து செய்யப்படும். மதியம், 1:00 மணிக்கு கிளம்பும் திருச்சி - பாலக்காடு ரயில் கரூர் வரை இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக, பாலக்காடு வரை இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ