உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தை மர்மச்சாவு போலீசில் மகன் புகார்

தந்தை மர்மச்சாவு போலீசில் மகன் புகார்

ஓமலுார், காடையாம்பட்டி, மேல்கோம்பையை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 38. புடவைக்கு கல் வைக்கும் தொழில் செய்கிறார். இவரது குடும்பத்துக்கும், இவரது சித்தப்பா குடும்பத்துக்கும் இடையே தடப்பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரு குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த மஞ்சுநாதன், ஓமலுார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், வீட்டில் இருந்த அவரது தந்தை நல்ராஜ், 60, கழுத்து, வயிறு பகுதியில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, மஞ்சுநாதனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று பார்த்தார். பின், தந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாக, அவர் அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை