மேலும் செய்திகள்
பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை
12-Oct-2024
பனமரத்துப்பட்டி: முதல் மனைவியின் மகன் புகாரால், 14 நாட்களுக்கு பின் தந்-தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்-யப்பட்டது.பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டியை சேர்ந்தவர் செல்லன், 70. பெட்டி கடை நடத்தி வந்தார். அவரது முதல் மனைவி, நாமக்கல் மாவட்டம் மெட்டலா அருகே கணவாய்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி, 60. இவர்களது மகன் பழனிசாமி, 40, விவ-சாயம் செய்கிறார்.ஆனால் முதல் மனைவியை பிரிந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக தும்பல்பட்டியை சேர்ந்த ஆண்டியம்மாள், 60, என்பவருடன், செல்லன் குடும்பம் நடத்தினார். சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட செல்லன், கடந்த, 23ல் தும்பல்பட்டியில் உயிரி-ழந்தார். இதை அறிந்து அங்கு வந்த பழனிசாமி, செல்லன் உடலை கேட்டார். ஆண்டியம்மாள் மறுத்துள்ளார். பஞ்சாயத்து பேசி, செல்லன் உடல், தும்பல்பட்டி மயானத்தில் அடக்கம் செய்-யப்பட்டது.ஆனால் தந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாக, போலீஸ், வரு-வாய்த்துறை அதிகாரிகளிடம் பழனிசாமி புகாரளித்தார். இதனால் நேற்று, சேலம் தாசில்தார் தாமோதரன் முன்னிலையில், தும்பல்-பட்டி மயானத்தில் செல்லன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின் சேலம் அரசு மருத்துவனை மருத்துவர்கள், பிரேத பரிசோ-தனை செய்தனர். இதையடுத்து மயானத்தில் சடலம் புதைக்கப்-பட்டது.
12-Oct-2024