தென் மாநில ஆணழகன் போட்டிகோப்பை, லச்சினை அறிமுகம்
சேலம்முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், சேலம் நேரு கலையரங்கில் வரும், 17, 18ல், தென் மாநில ஆணழகன் போட்டி நடக்க உள்ளது.அதேபோல் பெண்களுக்கும் நடக்க உள்ளது. இதற்கான போஸ்டர், பரிசு கோப்பைகள், லச்சினையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வெளியிட்டார். சேலம் எம்.பி., செல்வகணபதி, சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ஆணழகன் போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து, 350 பேர் பங்கேற்க உள்ளனர். ஆண்களுக்கு, 11 பிரிவுகள், பெண்களுக்கு இரு பிரிவுகள் என, போட்டிகள் நடத்தப்படும். முதலிடம் பிடிப்பவருக்கு, 1 லட்சம் ரூபாய், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில் பைக் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.