உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மங்களூரு - சென்னை இடையே சிறப்பு ரயில்

மங்களூரு - சென்னை இடையே சிறப்பு ரயில்

சேலம், பூஜா விழாவை முன்னிட்டு வரும், 29ல், மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூருவில் இரவு, 11:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மாலை, 4:30 மணிக்கு சென்னையை அடையும். 30 காலை, 6:24க்கு கோவை, 7:13க்கு திருப்பூர், 8:05க்கு ஈரோடு, 9:20க்கு சேலம், மதியம், 12:28க்கு ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்.மறுமார்க்க ரயில், 30 இரவு, 7:00 மணிக்கு சென்ட்ரலில் புறப்பட்டு, அடுத்த நாள் மதியம், 12:30 மணிக்கு மங்களூருடை அடையும். இந்த ரயில், 30 இரவு, 10:20க்கு ஜோலார்பேட்டை, நள்ளிரவு, 12:30க்கு சேலம், 2:00 மணிக்கு ஈரோடு, 2:50க்கு திருப்பூர், அதிகாலை, 3:47க்கு கோவையில் நின்று செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !