மேலும் செய்திகள்
கோவை - ஜெய்ப்பூர் சிறப்பு வார ரயில்
15-Oct-2025
சேலம், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க, சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - போத்தனுார் சிறப்பு ரயில், அக்., 17(நாளை), 18 இரவு, 11:35க்கு புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே, மறுநாள் காலை, 9:30 மணிக்கு போத்தனுாரை அடையும். அதிகாலை, 4:30க்கு சேலம், 5:40க்கு ஈரோடு வந்து செல்லும்.மறுமார்க்க ரயில், 18 மதியம், 2:00 மணிக்கு கிளம்பி, அன்று இரவு, 11:10க்கு சென்னையை அடையும். மதியம், 3:25க்கு ஈரோடு, 4:20க்கு சேலம் வந்து செல்லும். அதேபோல் போத்தனுார் - சென்னை சென்ட்ரல் மற்றொரு ரயில், அக்., 21 இரவு, 11:50க்கு கிளம்பி மறுநாள் காலை, 9:30க்கு சென்னையை அடையும். அதிகாலை, 2:15க்கு ஈரோடு, 3:20க்கு சேலம் வந்து செல்லும்.
15-Oct-2025