உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடலிறக்க நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு; கோகுலம் மருத்துவமனையில் தொடக்கம்

குடலிறக்க நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு; கோகுலம் மருத்துவமனையில் தொடக்கம்

சேலம்: சேலம் கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க நோய்(ஹெர்னியா) சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு, கோகுலம் மருத்துவமனை குழும மேலாண் இயக்குனர் அர்த்தநாரி தலைமை வகித்தார். ஜி.டி.பி., குழும தலைவர் முத்துராஜன், கோகுலம் மருத்துவமனை இயக்குனர் செல்லம்மாள், குத்துவிளக்கு ஏற்றி, குடலிறக்க நோய் சிறப்பு சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தனர்.இதுகுறித்து மேலாண் இயக்குனர் அர்த்தநாரி கூறியதாவது:இப்பிரிவில் அனுபவமிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளனர். 24 மணி நேர அவசர சிகிச்சை வசதிகள் மேற்கொள்ளப்படும். நவீன லேப்ராஸ்கோபி வசதிகளுடன் கூடிய அறுவை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு பின் தேவைப்படும் தீவிர சிகிச்சைகள், இயன்முறை மருத்துவம் ஆகிய வசதிகள் உள்ளன. சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.இதில் மருத்துவர்கள் ராஜேஷ், மிதுன்குமார், மோகன், ஜெயதேவ், சுப்ரமணியன், ராஜ்குமார், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை