எஸ்.ஆர்.வி., பள்ளி முதல்வருக்கு விருது
எஸ்.ஆர்.வி., பள்ளிமுதல்வருக்கு விருதுமேச்சேரி, நவ. 29--கோவையில், மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., வானதி முன்னிலையில், பஞ்சாப் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழக பள்ளிகளுக்கான சிறந்த விருதை, சேலம் மாவட்டம் பொட்டனேரி, எஸ்.ஆர்.வி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ரெமா ஜினீஸ்க்கு, டாக்டர் ஜேக்ஜிட் சிங் துாரி வழங்கினார். முதல்வரை, எஸ்.ஆர்.வி., பள்ளி தலைவர் கலையரசன், செயலர் ராஜரத்தினம், இயக்குனர் அமிர்தா, ஆசிரியர்கள் பாராட்டினர்.