உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15 முதல் கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

15 முதல் கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், :கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் வரும், 15 முதல் தொடங்கப்பட உள்ளது. இதில், மாநகராட்சி பகுதிகளில், 12 முகாம்கள், நகராட்சி பகுதிகளில், 9 முகாம்கள், டவுன் பஞ்., பகுதிகளில், 8 முகாம்கள், பஞ்., 19 முகாம்கள், புறநகர் பஞ்., பகுதிகளில், 12 முகாம்கள் என மொத்தம், 60 முகாம்கள் ஆகஸ்ட், 14- வரை நடக்கிறது. அத்துடன் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இதன்படி, வரும், 15ல்,- கரூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில், வாங்கப்பாளையத்தில் 4, 5 வார்டுக்கும், புகழூர் நகராட்சி காந்தியார் மண்டபத்தில், 1, 2 வார்டுக்கும், தவிட்டுப்பாளையம் பெரியார் மண்டபத்தில், என்.புகழூர் பஞ்சாயத்துக்கும், அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டிகோட்டை பி.ஜே.கே., மண்டபத்தில், ஆலமரத்துப்பட்டி, சேந்தமங்கலம் கீழ்பாகம் ஆகிய பஞ்சாயத்துக்கும் நடக்கிறது.வரும், 16ல் பள்ளப்பட்டி நகராட்சி மக்கள் மன்றத்தில், 1,2,9,10,12 வார்டுக்கும், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., அக்ரஹாரத்தில் பி.எஸ். திருமண மண்டபத்தில், 1,2,3,4,5,6,7,10,11 ஆகிய வார்டுக்கும், கிருஷ்ணராயபுரம், வீரராக்கியம் சுவாதி மஹாலில், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய பஞ்சாயத்துக்கும், கடவூர் தரகம்பட்டி சமுதாய கூடத்தில், தரகம்பட்டி பஞ்சாயத்துக்கும் முகாம் நடக்கிறது.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ