உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் முன் தலைவர்களின் சிலைகள் அகற்றம்

வாழப்பாடி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் முன் தலைவர்களின் சிலைகள் அகற்றம்

வாழப்பாடி: வாழப்பாடி, ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில், அதன் முன்புறம் இடையூறாக உள்ள கட்சி தலைவர்களின் சிலைகளை அகற்ற கோரி, கடந்த ஆக.,12ல் வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ஜெயந்தி தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், ஆகஸ்ட் இறுதிக்குள் சிலைகளை அகற்றி கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு மாற்றாக, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மூன்று சிலைகளுக்கும் திட்டுகள் டவுன் பஞ்., சார்பில் ஆக., 23ல் அமைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த மூன்று மாதங்களாக சிலைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வருவது தாமதமாகியது. இதையடுத்து, நேற்று இரவு வாழப்பாடி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் முன், இடையூறாக இருந்த மூன்று தலைவர்களின் சிலைகளை, வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, டவுன் பஞ்., செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் தலைமையிலான பணியாளர்கள், கிரேன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ