டவுன் பஸ் மீது கல் வீச்சு
ஆத்துார்: வாழப்பாடியில் இருந்து ஆத்துார் நோக்கி நேற்று மாலை, 4:30 மணிக்கு டவுன் பஸ்(தடம் எண்: 15பி), 50 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. கொத்தாம்பாடி வந்தபோது, சென்டர் மீடியனில் இருந்த மர்ம நபர், பெரிய கல்லை, பஸ் மீது வீசி-விட்டு தப்பினார். முன்புற கண்ணாடி நொறுங்கியது. பயணியர் தப்பினர். டிரைவர் பெரியசாமி புகார்படி ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.