மூடிய கல்குவாரியில் கற்கள் வெட்டி எடுப்பு வாகனம் பறிமுதல்; வருவாய்த்துறை விசாரணை
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, கோணசமுத்திரத்தில், வேலா-யுதகரடு அருகே வேம்பனேரியை சேர்ந்த செல்வத்துக்கு சொந்த-மான கல்குவாரி உள்ளது. அங்கு வெடிவைத்து கற்கள் வெட்டி எடுப்பதால், அருகே உள்ள குடியிருப்புகள் மீது கற்கள் விழுந்-தன. இதனால், 10 ஆண்டுக்கு முன்பே கல்குவாரி மூடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் கற்கள் வெட்டி எடுப்பதாக தகவல் கிடைக்க, நேற்று முன்தினம் இரவு, இடைப்பாடி தாசில்தார் ராஜ-மாணிக்கம்(பொ) உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அங்கு சென்-றனர். அப்போது, அங்கிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை பறிமுதல் செய்து, கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து விசாரித்தனர். நேற்று, சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, கல்குவாரியில் விசா-ரித்தார். பின், அறிக்கை தயார்படுத்த, இடைப்பாடி மண்டல துணை தாசில்தார் சீனிவாசனுக்கு உத்தரவிட்டார். வாகனம், வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பாதுகாக்க, அங்கு வருவாய்த்துறையினர் கண்காணிக்கின்றனர்.