உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவு சத்து அளவீட்டு முறையில் குளறுபடி மரவள்ளி விவசாயிகள் தவிப்பு

மாவு சத்து அளவீட்டு முறையில் குளறுபடி மரவள்ளி விவசாயிகள் தவிப்பு

கரூர்: மரவள்ளி கிழங்கில், மாவு சத்து அளவீட்டு முறையில் ஏற்படும் குளறுபடி காரணமாக, தொடர்ந்து விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருச்சி உள்பட, 18 மாவட்டங்களில் அதிகளவு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்ப-டுகிறது. கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், நடை-யனுார், கவுண்டம்பாளையம், சேமங்கலம், நொய்யல், க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. இங்கு முள்ளுவாடி, ரோஸ் கிழங்கு, வெள்ளை கிழங்கு என பல்-வேறு ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்கு நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும், 100க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு அனுப்பப்படுகி-றது. அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும், ஸ்டார்ச், ஜவ்வரிசி என ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆலைகளை சேர்ந்தவர்கள் நேரடியாகவோ அல்லது இடைத்தர-கர்கள் மூலமாகவோ விவசாயிகளிடமிருந்து கிழங்கை கொள்-முதல் செய்கின்றனர். அப்போது, கிழங்கின் மாவு சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாவு சத்தை 'பாயின்ட் ஸ்கேல்' மிஷின் மூலம் கண்டறிந்து கூறுகின்றனர். அந்த இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது, வியாபாரிகள் கூறும் மாவு சத்து உண்மைதானா? என்பது குறித்து விவசாயிகள் அறிய முடிய வில்லை.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: அறுவடை செய்யப்-படும் மரவள்ளி கிழங்கில், ஏதாவது சில கிழங்குகளை எடுத்து கருவி மூலம் அளவீடு செய்கின்றனர். பின் பாயின்டுக்கு இத்-தனை ரூபாய் என, கணக்கிட்டு டன் விலை நிர்ணயம் செய்கின்-றனர். எந்த அடிப்படையில், விலை நிர்ணயம் செய்கின்றனர் என்-பது புரியவில்லை. மாவு சத்தை கண்டறிந்து சொல்வதற்கு, அரசின் தரப்பில் எந்த வசதியும் இல்லாததால், வியாபாரிகள் கூறும் மாவு சத்து கணக்கை நம்பி விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் மாறுபட்ட விலையை அளிக்கின்றனர். கிழங்கு மாவு தயாரிக்க கூட்டுறவு ஆலைகள், அரசு ஆலைகள் இல்லாததால், தனியார் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை