கோடை கால விளையாட்டுபயிற்சி முகாம் தொடக்கம்
சேலம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சேலம் காந்தி மைதானத்தில், 2025ம் ஆண்டுக்கான கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என, விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.