உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா

கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா

தாரமங்கலம், தாரமங்கலம், மல்லிகுட்டை சென்றாய பெருமாள் கோவிலில், ஸ்ரீஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா, கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, சென்றாய பெருமாள் சுவாமிகளை, கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பின் மஞ்சள் நீராட்டுதலுடன், ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை