மேலும் செய்திகள்
கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!
29-Jul-2025
சேலம், சேலம், புதுரோடு அருகே, 40 ஆண்டுக்கு மேலாக செயல்பட்ட, 'தலேமா' நிறுவனத்தில், 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கியதாக கூறி, அதன் தொழிலாளர்களை, வேலையில் இருந்து விலகும்படி, நிர்வாகம் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. கடந்த, 1 முதல், அந்த நிறுவனம் பூட்டப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7ம் நாளான நேற்று, 30க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன், அதன் நிறுவன வளாகத்தில், 'மடிப்பிச்சை' எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'லாபத்தில் இயங்கும் நிறுவனத்தை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி பூட்டியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்' என்றனர்.
29-Jul-2025